search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழிப்புணர்வு பேரணி"

    • தருமபுரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையம் தருமபுரி நகராட்சி நடுநிலைப்பள்ளி சந்தைப்பேட்டையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    வரும் 1-ம் தேதி நகராட்சி தொடக்கப்பள்ளி டவுனில் நடைபெறும் மருத்துவ முகாமில், அனைத்து மாற்றுத் திறனாளி மாணவர்களும் கலந்து கொண்டு அடையாள அட்டை பெறுதல், உபகர ணங்களுக்கு அளவிடுதல், உதவித்தொகை பெறுதல், சிறப்பு பயிற்சிகள் அளித்தல் ஆகியன பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.பேரணியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் கவிதா தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கி ணைப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    இதில் அனைத்து சிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் ரகுபதி, வனிதா, சாரதா, ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயிலடியில் இன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்தப் பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மழைநீர் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவோம், மழைநீர் உயிர் நீர். வடகிழக்கு பருவமழைக் கால மழை நீரை முழுவதுமாக சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திட மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை நிறுவி முறையாக பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

    இதில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன் குமார், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ஜீவசங்கர், துணை மேற்பார்வை பொறியாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழு இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் குணசேகரன் தலைமை வகித்து கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழு இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் குணசேகரன் தலைமை வகித்து கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் உதயன் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் தளிர்விடும் பாரதம் சார்பாக தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள், எக்ஸல் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு தகவல் ஆணையம் அக்டோபர் 5 முதல் 12-ந் தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் நடைபெற்ற இப்பேரணியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒரு இந்திய குடிமகன் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு அறிக்கை, சுற்றறிக்கை, ஆவணம் ஆகியவற்றின் மூலம் எந்த விதமான தகவலாக இருப்பினும் அதனை உரிய மனுசெய்து சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரிடம் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த பேரணியானது குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கி ஜே.கே.கே ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவு பெற்றது. பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குமாரபாளையம் போலீசார் செய்திருந்தனர்.

    • பேரணியை வருவாய் கோட்டாட்சியர் பாபு தொடங்கி வைத்தார்.
    • மஞ்சப்பை குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் தகவல் அறியும் உரிமை சட்ட வாரவிழா குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடந்தது.

    கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா நடை பெறுவதை முன்னிட்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் பாபு தொடங்கி வைத்து கூறிய தாவது: தகவல் அறியும் உரிமை சட்ட வாரவிழா 5ம் தேதி முதல் 12ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.

    புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. பேரணியை தொடர்ந்து மஞ்சப்பை குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்றார்.

    இந்நிகழ்வில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மகாலிங் கமூர்த்தி, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெங்க டேஷ், விளையாட்டு அலு வலர் மகேஷ்குமார், சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, வட்டாட்சியர் விஜயகுமார், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு சித்த மருத்துவ பிரிவு மற்றும் கபிலர்மலை, பரமத்தி, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம்.
    • பரமத்திவேலூரில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு சித்த மருத்துவ பிரிவு மற்றும் கபிலர்மலை, பரமத்தி, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் பரமத்திவேலூரில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு வர்த்தக சங்க தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். வர்த்தக சங்க நிர்வாகிகள் மகுடபதி, கிருஷ்ணமூர்த்தி, கணேசன், கோபால், நண்பர்கள் குழு தலைவர் கேதாரநாதன், நண்பர்கள் குழு முன்னாள் தலைவர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலூர் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் மோகன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மூட்டு வலி, தோல் நோய்கள், சுவாச நோய்கள், மூலம், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு சித்த மருத்துவ டாக்டர்கள் ஆலோசனைகள் வழங்கி இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினர்.

    முகாமில் வேலூர் சித்த மருத்துவர் பிரிவு டாக்டர் பிரவேஷ்பாபு, கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார சித்த மருத்துவ பிரிவு டாக்டர் சித்ரா மற்றும் சித்த மருத்துவ டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.

    பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். நேற்று முன்தினம் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து பேரணி தொடங்கி அண்ணா சாலை, பஸ் நிலையம், பள்ளிசாலை வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • இலவசம் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.
    • பயிற்றுநர்கள்,சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒன்றியம் சார்பாக 0-18 வயது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடைபெற இருக்கும் இலவசம் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது. இப்பேரணி என்.ஜி.ஜி.ஓ காலனியில் அமைந்துள்ள அரசு பொண்ணு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் இருந்து நடைபெற்றது இந்த பேரணியில் மாற்றுத்திறன் மாணவ மாணவர்களுக்கு உண்டான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பள்ளி தலைமை ஆசிரியர், மேற்பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள்,ஆசிரிய- ஆசிரியைகள்,பயிற்றுநர்கள்,சிறப்பு ஆசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

    • சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • திருச்சுழி உட்கோட்ட பகுதியை சேர்ந்த சாலைப் பணியாளர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பூமிநாதர் கோவில் வாசலில் இருந்து தொடங் கிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை திருச்சுழி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறி யாளர் கணேசன் தொடங்கி வைத்தார்.

    இந்த விழிப்புணர்வு பேரணியில் போக்குவரத்து சின்னங்களை பின்பற்றுதல், மது அருந்தி வாகனம் ஓட்டா தே, தலைக்கவசம் அணிவ தன் அவசியம் என்பது போன்ற பல்வேறு வாசகங் கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்ட வாறு முக்கிய வீதிகள் வழி யாக ஊர்வலமாக வந்தனர்.

    மேலும் சாலையில் தலை கவசம் அணிந்து சாலை விதிகளையும், பாதுகாப்பு அம்சங்களோடு பின்பற்றி வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு கோஷங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு ஆண்டுக்கான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங் கப்பட்டன.

    இந்த விழிப்புணர்வு பேரணி பூமிநாதர் கோவி லில் இருந்து தொடங்கி திருச்சுழி நெடுஞ் சாலைத் துறை உட்கோட்ட அலுவல கம் வரை நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணி யில் உதவிப்பொறியாளர் சுந்தரபாண்டியன், சாலை ஆய்வாளர்களான முத்து செல்வம், சுந்தர வள்ளி மற் றும் திருச்சுழி உட்கோட்ட பகுதியை சேர்ந்த சாலைப் பணியாளர் கள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 5-ந் தேதி தொடங்குகிறது
    • குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெண்குழந்தைகளை காப்போம். பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மத்திய அரசால் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பாலின பாகுபாடு அடிப்படையில் பாலினம் அறிந்து கொள்வதை தடுப்பதற்காகவும் பெண்களின் வாழ்வையும் பாதுகாப்பையும் உறுதி செய்வது மற்றும் குறைந்து வரும் பெண் குழந்தை பாலின விகித பிம்பத்தின் பிரச்சினைக்கு தீர்வு கண்டு அவர்களின் கல்வியினை மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம். பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் 2022-2023-ம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தொடர்புடைய அனைத்து துறைகள் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 120 பெண் ராணுவ வீராங்கனைகள் இருசக்கர வாகன பேரணி நடத்துகின்றனர். மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்தும் இந்த பேரணியை வருகிற 5-ந் தேதி கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தின் முன்பு மத்திய இணை மந்திரி தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் பங்கேற்கின்றனர்.

    இந்த பேரணி 31-ந் தேதி குஜராத் மாநிலத்தில் முடிவடைகிறது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், தேசிய மாணவர் படை, வளரிளம் பெண்கள் பேரணியில் கலந்து கொண்டு கலந்துரையாடுகின்றனர். கன்னியாகுமரியில் தொடங்கி களியக்காவிளை வழியாக செல்லும் இந்தப்பேரணியில் பொதுமக்களும் கலந்து கொண்டு பெண்குழந்தைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குப்பையில்லா இந்தியா விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவர்கள் பொதுமக்களுக்கு குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நேருயுவகேந்திரா இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்களால் குப்பையில்லா இந்தியா தூய்மை சேவை விழிப்புணர்வு பேரணி வள்ளல் சீதக்காதி ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கி சேதுபதி நகர் 5-வது தெரு வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மக்கும் குப்பைகள், மக்காத குப்பை என 50 கிலோ எடையுள்ள குப்பைகளை மாணவர்கள் சேகரித்து குப்பை தொட்டியில் போட்டனர். இந்நிகழ்ச்சியை குற்ற பிரிவு பொருளாதார காவல் ஆய்வாளர் நந்தக்குமார், சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல், நேருயுவகேந்திரா தன்னார்வலர்கள் தொடங்கி வைத்தனர். மாணவர்கள் பொதுமக்களுக்கு குப்பைகளை குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    • பிரச்சாரத்தை கலெக்டர் சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • அடுத்த மாதம் வரை மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு பிரச்சார வாகனம், மற்றும் தெருமுனை கலைநிகழ்ச்சி பிரச்சாரம் உள்ளிட்டவற்றை கலெக்டர் சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கட்டுபாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக ஆண்ட்ராய்டு கைபேசி செயலி மூலம் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு, சமூக தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 12.10.2023 வரையில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பணியினை நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம் தடங்கம் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் இக்கணக்கெடுப்பு பணியினை பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மூன்று சக்கர வண்டி விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் தெருமுனை கலை நிகழ்ச்சி பிரச்சாரம் உள்ளிட்டவற்றையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாநில உரிமைகள் திட்ட மேலாளர் பிலிப்ஸ், திட்ட அலுவலர் அனிதா, மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பேரணியானது தென்காசி புதிய பஸ் நிலையத்தில் புறப்பட்டு சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் நிறைவடைந்தது.
    • ஊர்வலத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    தென்காசி:

    தென்காசி சாந்தி பன்னோக்கு மருத்துவமனை சார்பில் உலக இருதய தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மருத்துவர்கள், செவிலியர்கள் மாணவ, மாணவிகள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்ட இருதய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சாந்தி பன்னோக்கு மருத்துமனை நிறுவனர் மற்றும் தலைவரான டேவிட் செல்லத்துரை ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் தமிழரசன், மருத்துவர் பிரிதிவிராஜ் கலந்து கொ ண்டனர். மருத்துவர் அன்பரசன், மருத்துவர் கவுதமி தமிழரசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பேரணியானது தென்காசி புதிய பஸ் நிலை யத்தில் புறப்பட்டு, மேம்பா லம், கூலக்கடை பஜார், பெரிய கோவில், தென்காசி நகராட்சி, சந்தை பஜார், அரசு பஸ் டிப்போ வழியாக சாந்தி பன்னோக்கு மருத்துவமனையில் நிறை வடைந்தது. பேரணி ஆரம்பம் முதல் முடியும் வரை பெய்துவந்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஊர்வலமாக நடந்து வந்த மருத்துவர்கள், மாணவ, மாணவிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.

    ஊர்வலத்தில் கையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோசங்கள் எழுப்பியும் மாணவர்கள் சென்றனர். தென்காசியில் முதன் முறையாக கரோனரி ஆஞ்சியோகிராபி, ஆஞ்சியோ பிளாஸ்ட்டி, பேஸ்மேக்கர், பெரி பெரல் ஆஞ்சியோ கிராபி, பெரிபெரல் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி சிகிச்சைகள் மிகச் சிறந்த இதய நோய் மருத்துவர்களால் சாந்தி பன்னோக்கு மருத்துவ மனையில் அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    • உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது.

    திருப்பூர்:

    ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ந்தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். மாறிவரும் காலங்களில், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. உலகளாவிய மரணங்களுக்கு இதய நோய் முக்கிய காரணமாகி வருகிறது.

    இதனிடையே இதய நோய்களில் இருந்து தப்பிப்பது மற்றும் இதயத்தை நலமுடன் பாதுகாப்பது ஆகியவை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தனியார் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதனை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, பார்க் சாலை வழியாக சென்று மீண்டும் மாநகராட்சியை வந்தடைந்தது. இதில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், 1 -வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி, 2-வது மண்டல தலைவர் கோவிந்தராஜ் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×